Search This Blog

Nov 10, 2013

Talk on Thiruvai Mozi by D.A. Joseph

Very nice philosophical talk by D.A.Joseph http://www.youtube.com/watch?v=hjVH1KXbTuI
on Thiruvai mozi.

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி

திருவாய் மொழி முதல் பத்து


2791உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
1.1


2792மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.
1.2


2793இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.
1.3


2794நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.
1.4


2795அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே.
1.5


2796நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்
என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே.
1.6


2797திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.
1.7


2798சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.
1.8


2799உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
1.9


2800பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.
1.10


2801கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.
1.11


Courtesy - http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruvaaimozhi_1.html


Mukkur Swamigal thirupathangale thunai
Srimathe Ramanujaya namaha
Sri Lakshmi Narasimhaya namaha

No comments:

Post a Comment